அஸ்ஸலாமு அழைக்கும்[வரஹ்] எல்லாம் புகழும் இறைவனுக்கே!!!.. டுடே எக்ஸ்பிரஸ் நியூஸ் இணையதளம் வருகைக்கு நன்றி !!!....

வியாழன், மார்ச் 31, 2011

சென்னை பொதுக்குழு முடிவுகள் பரபரப்பு தீர்மானம்!


தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் TNTJ வின் நிலைப்பாடு குறித்து   TNTJ வின் மாநில  கூடி தேர்தல் நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளது. மாநில பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.





மாநில பொதுக்குழுவில் இரண்டு கேள்விகள் பொதுக்குழு உறுப்பினர்களிடம்  கேட்கப்பட்டது அந்த கேள்விகள் பின்வருமாறு ..

1 .முதலில் நாம் யாருக்கும் ஆதரவு கொடுக்கவேண்டாம் என்ற கேள்வியும் ?
2 .இரண்டாவது ADMK எதிராகவும் DMK ஆதராகவும் வாக்களிக்க சொல்லலாம் ? 
இதற்கு கண்துடைப்பு பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களித்தனர்

  அதன் ஒட்டு விபரம் 
1.  189
2 . 721


எனவே நாம் முன்பே அதிக பெட்டி தொகை கொடுத்தவர் என்ற அடிப்படையில்  நமது ஆதரவை நமது உணர்வில் எழுதியது போல "நக்கி பிழைக்கும்   DMK "  க்கு நமது ஆதரவு கொடுப்பது என முடிவுசெய்யப்பட்டது என இந்த கண்துடைப்பு பொத்தான் பொது குழு முடிவு செய்கிறது .

  மேலும் நமது பரம எதிரிகளான TMMK நிற்கும் மூன்று இடங்களிலும் அவர்களையும் தோற்கடிக்க வேண்டும் என முடிவு செயப்பட்டது .

கடைசியாக மேலும் ஒரு கேள்வி கேட்கப்பட்டது அது அண்ணன் PJ கலைஞரை சந்திக்கலாமா ? வேண்டாமா ? 
அதற்கு "பெட்டி வாங்கவேண்டும் என்றால் சந்தித்தால் தானே முடியும்" எனவே சந்திப்பது என முடிவுசெய்யபட்டது 

குறிப்பு : 

 தீர்மானம் எடுபதற்கான காரணம்
1 . பாக்கர் ADMK ஆதரவை தெரிவித்ததால்  
2 . மேலும் TMMK வும் ADMK விற்கு ஆதரவு    தெரிவித்தாலும் 
3 . மற்றும் DMK நம்மை நல்ல முறையில் பெட்டியால் கவனித்ததால் இந்த ஆதரவு . 
  
தமிழகம் முழுவதுமுள்ள  TNTJ தொண்டர்கள் நம் அண்ணனின் ஆணை கேற்ப வெற்றி பெற பெட்டி வாங்கி வேலை செய்யுமாறு கேட்டு கொள்ளபடுகிறார்கள்.                                                                                                                       

திங்கள், மார்ச் 21, 2011

வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க புதுசு புதுசா சிந்திக்கும் அரசியல் கட்சிகள்

தேர்தல் நெருங்க நெருங்க எப்படிப் பணம் கொடுப்பது பரிசுப் பொருட்களைக் கொடுப்பது எனப் புதுசு புதுசா தினுசு தினுசா அரசியல் கட்சிகள் யோசித்துக் கொண்டிருக்கின்றன.

விலைமதிப்பற்ற வாக்குகளை விலைகொடுத்து வாங்க முயற்சிக்கும் இந்த முயற்சிகளை தடுக்க தேர்தல் ஆணையம் விழிப்புடன் செயற்பட்டு வருகிறது. பகல் இரவு பாராமல் 24 மணிநேரமும் தீவிர வாகன

சோ தனை கண்காணிப்பு என நடந்து கொண்டே இருந்தாலும் அமைதியாக அரசியல் கட்சிகள் பணப்பட்டுவாடாவை தொடங்கி விட்டன. 24 மணி நேர கண்காணிப்பால் வாக்காளர்களுக்கு நேரடியாக பணம் கொடுக்க கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன. "பூத் சிலிப்' கொடுப்பது போல் பணம் கொடுப்பதற்கும் தேர்தல் ஆணையம் வாய்ப்பு அளிக்கவில்லை. இதனால் மதுரையில் வீடு வீடாக சென்று வாக்காளர்களின் மொபைல் போன், வங்கிக் கணக்கு போன்ற விபரங்களை சிலர் சேகரிக்கின்றனர். இது தொடர்பாக தி.மு.க.வை சேர்ந்த சிலரை மதுரை ஜெய்ஹிந்தபுரம் தெப்பக்குளம், எஸ்.எஸ்.கொலனி பொலிஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் கீழ் வைத்தியநாதபுரத்தில் இரவு 11 மணிக்கு மின்தடையை ஏற்படுத்தி முன்னாள் பெண் உறுப்பினர் மற்றும் அவரது ஆதவாளர்கள் வீடு வீடாகச் சென்று "கணக்கெடுத்தாகக் கூறி அவரது வீட்டை சோதனையிட வேண்டுமென்று' வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் தத்தனேரி பிரதான வீதியில் மறியல் செய்தனர்.

அவர்கள் கூறுகையில், "பணம் இலவச பொருட்கள் கொடுப்பதாக பொலிஸிற்கு தகவல் தெரிவித்தபோது பெயரளவிற்கு விசாரித்துவிட்டு சென்றுவிட்டனர். இதைப் பயன்படுத்தி மீண்டும் இரவு ஒரு மணிக்கும் மின்தடை செய்து பணம் கொடுத்தனர். தேர்தல் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து வீடுகளைச் சோதனையிடக் கூறினோம். அவர்களோ "தங்களுக்கு "பவர்' இல்லை. ஆட்சியாளர் தான் முடிவு செய்ய வேண்டும்' எனக் கூறி சென்றுவிட்டனர். இதைப்பயன்படுத்தி இலவச பொருட்களைக் கடத்தி விட்டனர் என்றனர். இவர்களைப் பொலிஸார் சமரசம் செய்து கொண்டிருந்தபோது தி.மு.க. நிர்வாகிகள் அங்கு வந்தனர். வீடுகளில் சோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு.க. வினரைப் பொலிஸார் சமரசம் செய்து அனுப்பினர்.

இலவசங்களையும் வாக்குக்குப் பணம் கொடுப்பதையும் தேர்தல் ஆணையம் வேண்டுமானால் எதிர்க்கலாம். ஆனால் விலைமதிப்பற்ற வாக்குகளுக்கு சொந்தக்காரர்களான வாக்காளர்கள் எப்போது நம் வீட்டுக்கு பணம் வரும் இலவச பொருட்கள் எப்போது தருவார்கள் என்றே காத்திருக்கிறார்கள். மதுரை நகரைப் பொறுத்தவரை சமீப நாட்களாக மாலை 6.30 மணியளவில் தொடங்கி அதிகாலை வரை அவ்வப்போது 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. ஒருவேளை பணம் விநியோகிக்கத் தான் மின் விநியோகத்தை நிறுத்துறாங்களோ? என்று நினைக்கும் வாக்காளர்கள் மின் துண்டிக்கப்பட்டால் கதவை திறந்து வைத்து வாக்குகளை விற்கத் தயாராகி விடுகிறார்களாம்.

லிபியா மீது தாக்குதல்- இந்தியா கண்டனம்


லிபியா மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

ஐநா சபை தீர்மானத்தின்படி லிபியா நாட்டின் மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டு ராணுவப் படையினர் விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலுக்கு இந்திய அரசு வருத்தமும், கண்டனமும் தெரிவித்துள்ளது. 

மேலும் லிபியாவில் வன்முறை தொடர்வதற்கும் மனிதாபிமான சூழ்நிலை சீர்குலைந்து வருவதற்கும் ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொள்கிறது என்றும் 

விமான தாக்குதல், அங்குள்ள அப்பாவி பொது மக்கள், வெளிநாட்டுக்காரர்கள் மற்றும் தூதரக பணியாளர்களுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று இந்தியா நம்புகிறது எனவும் தெரிவித்துள்ளது.

மதிமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும்:


சென்னை, மார்ச் 20: மதிமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி:

 காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும், திமுக தலைமையிலான மாநில அரசும் கடைபிடித்து வரும் தவறான பொருளாதாரக் கொள்கையினால் விலைவாசி உயர்வு, விவசாயத்தில் சரிவு, மின்வெட்டு, தொழில் நலிவு, வேலையின்மை என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஊழல் கூட்டணியான திமுக - காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்துவது என்பது, மக்கள் முன்னுள்ள முக்கியமான கடமையாக உள்ளது. இத்தகைய போராட்டத்தில் அதிமுக தலைமையில் தேமுதிக, மாக்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஃபார்வர்டு பிளாக், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் உள்ளிட்ட பல கட்சிகள் ஓரணியில் நிற்கின்றன.
 மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கையை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் மதிமுகவின் பங்களிப்பு முக்கியமானது. இத்தகைய சூழலில் மதிமுக, தமிழகம் மற்றும் புதுவை சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்று எடுத்துள்ள முடிவு வேதனையளிக்கிறது. மதிமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் எனக் கூறியுள்ளார்.
 இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன்: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுவந்த மதிமுக இப்போது தேர்தலை புறக்கணிப்போம் என்று முடிவு எடுத்திருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
 இந்த முடிவை மதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதிமுக பொதுச் செயலாளரும் இதற்கான சுமூகத் தீர்வை உருவாக்கித்தர வேண்டும் எனக் கூறியுள்ளார்.
 ஜவாஹிருல்லாஹ்: தேர்தல் புறக்கணிப்பு முடிவை மதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கூறியுள்ளார்.
 
Photobucket