அஸ்ஸலாமு அழைக்கும்[வரஹ்] எல்லாம் புகழும் இறைவனுக்கே!!!.. டுடே எக்ஸ்பிரஸ் நியூஸ் இணையதளம் வருகைக்கு நன்றி !!!....

ஞாயிறு, ஜனவரி 12, 2014

மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு புதிய வியூகம் அமைத்து இருக்கிறது தேமுதிக:விஜயகாந்த்



மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு தேமுதிக புதிய வியூகம் அமைத்து இருக்கிறது என்று, அந்த கட்சித் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் இன்னமும் கூட்டணி கட்சிகள் உறுதி செய்யப்படவில்லை. தேமுதிகவுக்கு காங்கிரஸ், பாஜக, திமுக, மதிமுக அழைப்பு விடுத்துள்ள நிலையில், மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு தேமுதிக புதிய வியூகம் அமைத்து இருக்கிறது என்று சஸ்பென்சுடன் கூறி உள்ளார் விஜயகாந்த்.

இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. தமது மனைவி பிரேமலதவுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விஜயகாந்த், மக்களுக்கு இலவசங்கள் தேவையில்லை என்றும், இது தேர்தல் வெற்றிக்கு உதவாது என்றும் கூறியுள்ளார்.

மேலும் கோர்வையான பேச்சுக்களால் மக்களை ஏமாற்றிவிட முடியாது என்றும் கூறியுள்ளார்.இதை எல்லாம் கருத்தில் கொண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற தேமுதிக புதிய வியூகம் அமைத்து இருக்கிறது என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார். 

சனி, ஜனவரி 11, 2014

60 ஆண்டுகளாக குளித்தே அறியாத ஈரானின் ‘கப்பு மனிதர்’

60 ஆண்டுகளாக குளித்தே அறியாத ஈரானின் ‘கப்பு மனிதர்’
டெஹ்ரான், ஜன. 11-

தினந்தோறும் குளிக்காவிட்டால் நம்மில் பலருக்கு தங்களைப் பற்றியே அருவெறுப்புணர்வு தோன்றிவிடும். இன்னும் சிலருக்கு காலை, மாலை இரு வேளையும் குளிக்கவில்லை என்றால் எதையோ பறிகொடுத்தது போல் ஆகிவிடும்.

உலகின் மனித நியதி இவ்வாறிருக்க, ஈரான் நாட்டில் வாழும் 80 வயது முதியவர், கடந்த 60 ஆண்டுகளாக குளிப்பதற்கு கெடு சொல்லிக்கொண்டே காலத்தை கடத்தி வந்துள்ளார் என்ற விசித்திர செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

மதச்சார்பற்ற கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தோம்: விஜயகாந்தை சந்தித்த பிறகு தொல் திருமாவளவன் பேட்டி


 சென்னை,                                                                                                                                                              
தேமுதிக தலைவர் விஜயகாந்தை விடுதலை சிறுதைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன்  இன்று  சந்தித்து பேசினார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக  அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் யூசுப் இல்லத் திருமணவிழா அழைப்பிதழ் வழங்க தொல் திருமாவளவன் சென்றதாக கூறப்பட்டது.
Photobucket