அஸ்ஸலாமு அழைக்கும்[வரஹ்] எல்லாம் புகழும் இறைவனுக்கே!!!.. டுடே எக்ஸ்பிரஸ் நியூஸ் இணையதளம் வருகைக்கு நன்றி !!!....

புதன், ஜனவரி 04, 2012

ஆஸ்திரேலியா அபார ஆட்டம் : கிளார்க் இரட்டை சதம்!


சிட்னியில் நடந்து வரும் இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி அபாரமாக ஆடி 482 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவை விட ஆஸ்திரேலிய அணி 291 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கேல் கிளார்க் இரட்டை சதம் அடித்துள்ளார். 

இன்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 482 ரன்கள் எடுத்துள்ளது. மைக்கல் கிளார்க் 251 ரன்களுடனும், ஹசி 54 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்னும் 3 நாள் ஆட்டம் மீதமுள்ளது. இந்திய அணி, முதல் இன்னிங்க்சில் 191 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் 4 விக்கெட்கள் எடுத்து அசத்தினார். ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்க்ஸ் துவக்கத்தில் சற்று தடுமாறியது. 

அதன் பின்னர் வந்த பான்டிங், கிளார்க் ஜோடி சிறப்பாக விளையாடியது. ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் 134 ரன் எடுத்தார். இது பாண்டிங்கின் 40 ஆவது சதமாகும். மைக்கேல் கிளார்க் அபாரமாக விளையாடி 251 ரன்களுடன், அவுட் ஆகாமல் இருக்கிறார். இது இவரின் 18வது டெஸ்ட் சதமாகும் . இவரது டெஸ்ட் உயர்ந்தபட்ச ரன் எண்ணிக்கையும் இதுதான். இதற்கு முன்னர் 168 ரன்கள்தான் கிளார்க்கின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

செவ்வாய், ஜனவரி 03, 2012

வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு குளிர் காற்று வீசும் லேசான மழை பெய்யும்

சென்னை : வளிமண்டல மேல் அடுக்கில் காற்றில் ஈரப்பதம் இருப்பதால், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‘தானே’ புயல் தமிழகத்தை கடந்து அரபிக் கடலுக்கு சென்றது. அங்கு, அது வலுவிழந்து குறைந்த காற்றழுத்தமாக மாறியது. இந்நிலையில், வங்கக் கடலில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சத் தொடங்கியது.

இதனால், தமிழகத்தில் நேற்று திடீரென சில இடங்களில் மழை பெய்தது. அதில் மாமல்லபுரம், தாம்பரம், பூந்தமல்லி, செம்பரம்பாக்கம் ஆகிய இடங்களில் 10 மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், வங்கக் கடலில் வளி மண்டல மேல் அடுக்கில் காற்றின் ஈரப்பதம் உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் குளிர் காற்று வீசும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். மற்ற இடங்களில் வறண்ட வானிலை காணப்படும்.

புயல் பாதித்தப் பகுதிகளைக் கருணாநிதி நேரில் ஆய்வு!


தானே புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழகத்தின் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளை திமுக தலைவர் கருணாநிதி நாளை(04/01/2012) நேரில் சென்று பார்வையிட்டு சேத விவரங்களை கண்டறியவுள்ளார்.
இது குறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
Photobucket