அஸ்ஸலாமு அழைக்கும்[வரஹ்] எல்லாம் புகழும் இறைவனுக்கே!!!.. டுடே எக்ஸ்பிரஸ் நியூஸ் இணையதளம் வருகைக்கு நன்றி !!!....

திங்கள், மார்ச் 21, 2011

வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க புதுசு புதுசா சிந்திக்கும் அரசியல் கட்சிகள்

தேர்தல் நெருங்க நெருங்க எப்படிப் பணம் கொடுப்பது பரிசுப் பொருட்களைக் கொடுப்பது எனப் புதுசு புதுசா தினுசு தினுசா அரசியல் கட்சிகள் யோசித்துக் கொண்டிருக்கின்றன.

விலைமதிப்பற்ற வாக்குகளை விலைகொடுத்து வாங்க முயற்சிக்கும் இந்த முயற்சிகளை தடுக்க தேர்தல் ஆணையம் விழிப்புடன் செயற்பட்டு வருகிறது. பகல் இரவு பாராமல் 24 மணிநேரமும் தீவிர வாகன

சோ தனை கண்காணிப்பு என நடந்து கொண்டே இருந்தாலும் அமைதியாக அரசியல் கட்சிகள் பணப்பட்டுவாடாவை தொடங்கி விட்டன. 24 மணி நேர கண்காணிப்பால் வாக்காளர்களுக்கு நேரடியாக பணம் கொடுக்க கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன. "பூத் சிலிப்' கொடுப்பது போல் பணம் கொடுப்பதற்கும் தேர்தல் ஆணையம் வாய்ப்பு அளிக்கவில்லை. இதனால் மதுரையில் வீடு வீடாக சென்று வாக்காளர்களின் மொபைல் போன், வங்கிக் கணக்கு போன்ற விபரங்களை சிலர் சேகரிக்கின்றனர். இது தொடர்பாக தி.மு.க.வை சேர்ந்த சிலரை மதுரை ஜெய்ஹிந்தபுரம் தெப்பக்குளம், எஸ்.எஸ்.கொலனி பொலிஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் கீழ் வைத்தியநாதபுரத்தில் இரவு 11 மணிக்கு மின்தடையை ஏற்படுத்தி முன்னாள் பெண் உறுப்பினர் மற்றும் அவரது ஆதவாளர்கள் வீடு வீடாகச் சென்று "கணக்கெடுத்தாகக் கூறி அவரது வீட்டை சோதனையிட வேண்டுமென்று' வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் தத்தனேரி பிரதான வீதியில் மறியல் செய்தனர்.

அவர்கள் கூறுகையில், "பணம் இலவச பொருட்கள் கொடுப்பதாக பொலிஸிற்கு தகவல் தெரிவித்தபோது பெயரளவிற்கு விசாரித்துவிட்டு சென்றுவிட்டனர். இதைப் பயன்படுத்தி மீண்டும் இரவு ஒரு மணிக்கும் மின்தடை செய்து பணம் கொடுத்தனர். தேர்தல் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து வீடுகளைச் சோதனையிடக் கூறினோம். அவர்களோ "தங்களுக்கு "பவர்' இல்லை. ஆட்சியாளர் தான் முடிவு செய்ய வேண்டும்' எனக் கூறி சென்றுவிட்டனர். இதைப்பயன்படுத்தி இலவச பொருட்களைக் கடத்தி விட்டனர் என்றனர். இவர்களைப் பொலிஸார் சமரசம் செய்து கொண்டிருந்தபோது தி.மு.க. நிர்வாகிகள் அங்கு வந்தனர். வீடுகளில் சோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு.க. வினரைப் பொலிஸார் சமரசம் செய்து அனுப்பினர்.

இலவசங்களையும் வாக்குக்குப் பணம் கொடுப்பதையும் தேர்தல் ஆணையம் வேண்டுமானால் எதிர்க்கலாம். ஆனால் விலைமதிப்பற்ற வாக்குகளுக்கு சொந்தக்காரர்களான வாக்காளர்கள் எப்போது நம் வீட்டுக்கு பணம் வரும் இலவச பொருட்கள் எப்போது தருவார்கள் என்றே காத்திருக்கிறார்கள். மதுரை நகரைப் பொறுத்தவரை சமீப நாட்களாக மாலை 6.30 மணியளவில் தொடங்கி அதிகாலை வரை அவ்வப்போது 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. ஒருவேளை பணம் விநியோகிக்கத் தான் மின் விநியோகத்தை நிறுத்துறாங்களோ? என்று நினைக்கும் வாக்காளர்கள் மின் துண்டிக்கப்பட்டால் கதவை திறந்து வைத்து வாக்குகளை விற்கத் தயாராகி விடுகிறார்களாம்.

கருத்துகள் இல்லை:

Photobucket