அஸ்ஸலாமு அழைக்கும்[வரஹ்] எல்லாம் புகழும் இறைவனுக்கே!!!.. டுடே எக்ஸ்பிரஸ் நியூஸ் இணையதளம் வருகைக்கு நன்றி !!!....

திங்கள், மார்ச் 21, 2011

மதிமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும்:


சென்னை, மார்ச் 20: மதிமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி:

 காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும், திமுக தலைமையிலான மாநில அரசும் கடைபிடித்து வரும் தவறான பொருளாதாரக் கொள்கையினால் விலைவாசி உயர்வு, விவசாயத்தில் சரிவு, மின்வெட்டு, தொழில் நலிவு, வேலையின்மை என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஊழல் கூட்டணியான திமுக - காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்துவது என்பது, மக்கள் முன்னுள்ள முக்கியமான கடமையாக உள்ளது. இத்தகைய போராட்டத்தில் அதிமுக தலைமையில் தேமுதிக, மாக்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஃபார்வர்டு பிளாக், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் உள்ளிட்ட பல கட்சிகள் ஓரணியில் நிற்கின்றன.
 மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கையை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் மதிமுகவின் பங்களிப்பு முக்கியமானது. இத்தகைய சூழலில் மதிமுக, தமிழகம் மற்றும் புதுவை சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்று எடுத்துள்ள முடிவு வேதனையளிக்கிறது. மதிமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் எனக் கூறியுள்ளார்.
 இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன்: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுவந்த மதிமுக இப்போது தேர்தலை புறக்கணிப்போம் என்று முடிவு எடுத்திருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
 இந்த முடிவை மதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதிமுக பொதுச் செயலாளரும் இதற்கான சுமூகத் தீர்வை உருவாக்கித்தர வேண்டும் எனக் கூறியுள்ளார்.
 ஜவாஹிருல்லாஹ்: தேர்தல் புறக்கணிப்பு முடிவை மதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கூறியுள்ளார்.
 

கருத்துகள் இல்லை:

Photobucket