அஸ்ஸலாமு அழைக்கும்[வரஹ்] எல்லாம் புகழும் இறைவனுக்கே!!!.. டுடே எக்ஸ்பிரஸ் நியூஸ் இணையதளம் வருகைக்கு நன்றி !!!....

செவ்வாய், ஜனவரி 03, 2012

புயல் பாதித்தப் பகுதிகளைக் கருணாநிதி நேரில் ஆய்வு!


தானே புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழகத்தின் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளை திமுக தலைவர் கருணாநிதி நாளை(04/01/2012) நேரில் சென்று பார்வையிட்டு சேத விவரங்களை கண்டறியவுள்ளார்.
இது குறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


"தானே புயலாலும் கடும் மழையாலும் புதுச்சேரி, மற்றும் கடலூர், விழுப்புரம், திருவாரூர் முதலான மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இச்சேதப் பகுதிகளுக்கு மத்திய-மாநில அரசுகள் உடனடியாக ஆற்ற வேண்டிய நிவாரண பணிகளை எடுத்துக்கூறி அரசின் மூலம் வழிவகுக்கவும், எந்த உதவியும் அற்று, அல்லல்படும் ஏழை எளிய மக்களுக்கு ஆங்காங்கு உள்ள திமுக அமைப்புகளின் சார்பாக துணைபுரிவதற்கான வழிவகைகளை காணவும், திமுக தலைவர் கருணாநிதி புதன்கிழமை காலை முதல் புதுச்சேரி மற்றும் கடலூர், விழுப்புரம், திருவாரூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுகிறார்."
என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தானே புயல் மற்றும் கடும் மழையினால் கடலூர் முதலான மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் நிலையில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா இன்னும் புயல் பாதித்தை பகுதிகளை நேரில் சென்று பார்வையிடவோ அல்லது அதற்கான அறிவிப்பு ஏதும் வெளியிடவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. புயலில் இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை அறிவிப்பை மட்டும் முதல் அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். இந்நிலையில் முன்னாள் முதல்வரான கருணாநிதி புயல் பாதித்தப் பகுதிகளை நேரில் சென்று பார்வையிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

Photobucket