அஸ்ஸலாமு அழைக்கும்[வரஹ்] எல்லாம் புகழும் இறைவனுக்கே!!!.. டுடே எக்ஸ்பிரஸ் நியூஸ் இணையதளம் வருகைக்கு நன்றி !!!....

சனி, ஜனவரி 11, 2014

மதச்சார்பற்ற கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தோம்: விஜயகாந்தை சந்தித்த பிறகு தொல் திருமாவளவன் பேட்டி


 சென்னை,                                                                                                                                                              
தேமுதிக தலைவர் விஜயகாந்தை விடுதலை சிறுதைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன்  இன்று  சந்தித்து பேசினார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக  அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் யூசுப் இல்லத் திருமணவிழா அழைப்பிதழ் வழங்க தொல் திருமாவளவன் சென்றதாக கூறப்பட்டது.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தொல். திருமாவளவன் மதசார்பற்ற கூட்டணிக்கு வருமாறு தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்தோம் என்று கூறினார். மேலும்  அவர் கூறும் போது, மதவாத, சாதிவாத கட்சிகளுடன் கூட்டணி வேண்டாம் என்று தேமுதிகவிடம் வலியுறுத்தினோம். விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ள கூட்டணியில் தேமுதிக இடம் பெற வேண்டும் என்பது எங்களது விருப்பம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

Photobucket