அஸ்ஸலாமு அழைக்கும்[வரஹ்] எல்லாம் புகழும் இறைவனுக்கே!!!.. டுடே எக்ஸ்பிரஸ் நியூஸ் இணையதளம் வருகைக்கு நன்றி !!!....

புதன், நவம்பர் 09, 2011

ஜெயலலிதாவிடம் 775 கேள்விகள் பாக்கியுள்ளன– வழக்கறிஞர்


பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கேட்பதற்கு இன்னும் 775 கேள்விகள் பாக்கி உள்ளதாக ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் தெரிவித்துள்ளார்.



வருவாய்க்கு அதிகமாக 66 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் குவித்தது தொடர்பான வழக்கு விசாரணை பெங்களூரு பரப்பன அக்ரஹாரவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த அக்டோபர் 20,21 ம் ஜெயலலிதா ஆஜரானார். அப்போது நீதிபதி மல்லிகர்ஜூனைய்யா 571 கேள்விகளை ஜெயலலிதா கேட்டுள்ளார். மீதி கேள்விகள் பாக்கியுள்ளதால் 08.11.2011 அன்று ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தவிர்ப்பதற்காக ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து அவர் பெங்களூரு நீதிமன்றத்தில் செவ்வாய்கிழமை ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

22 ஆஜராக உத்தரவு 

இந்தநிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மட்டும் செவ்வாய்கிழமை ஆஜரானார்கள். ஆனால், ஜெயலலிதா ஆஜராகவில்லை வேறு தேதியில் ஆஜராக அனுமதி கேட்டு ஜெயலலிதா தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், ஜெயலலிதா வரும் 22ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டது. தேவைப்பட்டால் அதற்கு மறுநாளும் விசாரணை தொடரும் என்றும் அறிவித்துள்ளது.

775 கேள்விகள் 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார், சொத்துகுவிப்பு வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் ஆஜரானார்கள். அவர்களிடம் கேள்வி கேட்கப்படவில்லை. ஜெயலலிதாவிடம் இன்னும் 775 கேள்விகள் கேட்கப்பட வேண்டும் அந்த கேள்விகள் முடிந்த பின்னரே மற்றவர்களிடம் கேட்கப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

Photobucket