அஸ்ஸலாமு அழைக்கும்[வரஹ்] எல்லாம் புகழும் இறைவனுக்கே!!!.. டுடே எக்ஸ்பிரஸ் நியூஸ் இணையதளம் வருகைக்கு நன்றி !!!....

திங்கள், நவம்பர் 14, 2011

ஷூக்களை கழற்றி சென்று ஆய்வு : நியுயார்க் விமான நிலையத்தில், கலாமிடம் 2 முறை சோதனை!

புதுடெல்லி: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிடம், நியுயார்க் விமான நிலையத்தில் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் 2 முறை சோதனை நடத்தி அவமதிப்பு
செய்தது தெரிய வந்துள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், அமெரிக்காவில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கடந்த செப்டம்பரில் சென்றார். அங்கிருந்து அவர் செப்டம்பர் 29ம் தேதியன்று ஏர்&இந்தியா விமானத்தில் இந்தியா திருப்பியிருக்கிறார். 
நியுயார்க்கில் உள்ள ஜான் கென்னடி விமான நிலையத்தில் அவரிடம் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். அவரது ஆடைகளை தடவிப் பார்த்து, ஆயுதம் உள்ளதா என சோதனையிட்டனர். வழக்கமாக, இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி கலாம் போன்ற உலகம் முழுவதும் அறியப்பட்ட மிக முக்கியப் பிரமுகர்களை சோதனையிடுவது கிடையாது. 
ஆனால், கலாமிடம் சோதனை நடத்திய விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அத்துடன் விடவில்லை. அவர் விமானத்தில் ஏறி அமர்ந்த பின்பு மீண்டும் அவரை சோதனை செய்ய முயன்றனர். இதற்கு ஏர்&இந்தியா அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், கலாம் எந்த ஆட்சேபணையும் கூறவில்லை. இதன்பின், அவரது ஷூக்களையும், கோட்&ஜாக்கெட்டையும் வாங்கிச் சென்று அவற்றை சோதனையிட்டு விட்டு, பின்னர் திருப்பி கொடுத்தனர். கலாம் நாடு திரும்பியதும், அவரது உதவியாளர்கள் நியுயார்க் சம்பவம் குறித்து மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்திற்கு தகவல் கொடுத்தனர். 
சம்பவம் குறித்து ஏர்&இந்தியா இயக்குனர் எஸ்.மாத்தூர் தயாரித்த அறிக் கை, வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. இதைத் தொடர் ந்து, வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, உடனடியாக அமெரிக்காவில் உள்ள இந்திய தூதர் நிருபமா ராவிடம் தொடர்பு கொண்டு, இந்தியாவின் கடும் கண்டனத்தை அமெரிக்காவின் உயர் பொறுப் பில் உள்ளவர்களிடம் தெரிவிக்க உத்தரவிட்டார். இதன்படி, அமெரிக்காவிடம் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கலாமிடம் நடந்த சோதனை குறித்து வெளியுறவு துறை அமைச்சர் கிருஷ்ணா கூறுகையில், ‘இதை ஒருபோதும் ஏற்கவே முடியாது. இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுக்க வேண்டியிருக்கும்’ என்று எச்சரிக்கை விடுத்தார். ஏற்கனவே, கடந்த 2009ல் டெல்லியில் அமெரிக்காவின் கான்டினென்டல் ஏர்லைன்ஸ் அதிகாரிகள், கலாமிடம் இதே போல் சோதனை நடத்தினர். 

கருத்துகள் இல்லை:

Photobucket