அஸ்ஸலாமு அழைக்கும்[வரஹ்] எல்லாம் புகழும் இறைவனுக்கே!!!.. டுடே எக்ஸ்பிரஸ் நியூஸ் இணையதளம் வருகைக்கு நன்றி !!!....

புதன், ஏப்ரல் 20, 2011

தேர்தலில் அதிபர் வெற்றி நைஜீரியாவில் கலவரம்; 360 பேர் காயம் 15 ஆயிரம் பேர் வெளியேறினர்

தேர்தலில் அதிபர் வெற்றி 
 நைஜீரியாவில் கலவரம்; 360 பேர் காயம்
 
 15 ஆயிரம் பேர் வெளியேறினர்


ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அதிபர் தேர்தல் நடந்தது. அதில், அதிபர் குட்லக் ஜோனாதன் 57 சதவீதம் வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து அவர் மீண்டும் ஆட்சி அமைக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் சர்வாதிகாரி முகமது புகார் 31 சத வீதம் வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.   வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளி வரத் தொடங்கியது முதல் அதிபர் ஜோனாதனின் ஆதரவாளர்கள் பல இடங்களில் களியாட்டங்கள் மற்றும் கொணட்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
 
இது புகாரின் ஆதரவாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக கூறி ஆங்காங்கே கலவரத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து குதுனா, கத்சினா, ஷம்பாரா மாகாணங்களில் வன்முறை சம்பவங்களும் அதை தொடர்ந்து கலவரமும் ஏற்பட்டது.
 
பின்னர் இக்கலவரம் 14 மாகாணங்களுக்கும் பரவியது. அக்கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். ஆனால் அதுபற்றி தகவல் வெளியாகவில்லை. 360 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கலவரத்தில் பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் தென்குதுனா மாகாணத்தை சேர்ந்தவர்கள். இத்தகவலை செஞ்சிலுவை சங்க பேரிடர் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் உமர் அப்துல் மரிகா தெரிவித்துள்ளார்.  
 
இதற்கிடையே கலவரத்தில் ஈடுபடும் மக்களை அமைதி வழியில் திரும்பும்படி அதிபர் குட்லக் ஜோனா தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேபோன்று தேர்தலில் தோல்வி அடைந்த முகமது புகாரியும் நாட்டு மக்கள் அமைதி காக்கும்படி கோரியுள்ளார்.




கருத்துகள் இல்லை:

Photobucket