அஸ்ஸலாமு அழைக்கும்[வரஹ்] எல்லாம் புகழும் இறைவனுக்கே!!!.. டுடே எக்ஸ்பிரஸ் நியூஸ் இணையதளம் வருகைக்கு நன்றி !!!....

செவ்வாய், ஏப்ரல் 05, 2011

இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம்; வெப்பநிலை மேலும் அதிகரிக்கலாம்

இலங்கைக்கு நேராக நாளைமுதல் சூரியன் உச்சம் கொடுப்பதால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல்  திணைக்களம் அறிவித்துள்ளது.


இதன் காரணமாக இம் மாதம் முழுவதும் பகல் மற்றும் இரவு நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக உணரப்படும்.
தற்போது நிலவும் வெப்பநிலையை விட இக் காலப் பகுதியில் வெப்பத்தின் அளவு மேலும் 5 முதல் 10 பாகை வரை அதிகரிக்கலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் எதிர்வு கூறியுள்ளனர்.
இ÷தவேளை, அதிகரித்த வெப்பத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறு மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
வெயிலில் நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்ப்பதுடன் அதிகளவான தண்ணீர் மற்றும் பழச்சாறுகளை அருந்துவதன் மூலம் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து சருமத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமெனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், கடும் வெயிலில் வெளியில் செல்ல நேரும் போது குளிர் கண்ணாடிகள், குடை, தொப்பி ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து கண்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமெனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Photobucket