அஸ்ஸலாமு அழைக்கும்[வரஹ்] எல்லாம் புகழும் இறைவனுக்கே!!!.. டுடே எக்ஸ்பிரஸ் நியூஸ் இணையதளம் வருகைக்கு நன்றி !!!....

புதன், ஏப்ரல் 20, 2011

சச்சின் சாதனையை ஒரு விருதால் அளவிட முடியாது


சச்சினின் சாதனையை ஒரு விருதால் அளவிட முடியாது. விருதுகளை விட சச்சின் மேன்மையானவர் என்று இந்திய டென்னிஸ் நட்சத்திரம் மகேஷ் பூபதி தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள பலரும் சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறி வரும் வேளையில், மகேஷ் பூபதி இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தனது காதல் மனைவி லாரா தத்தாவுடன் கொல்கத்தாவிற்கு செவ்வாய்க்கிழமை வந்த மகேஷ் பூபதி இதுகுறித்து மேலும் கூறியது:
சச்சின் விருதுகளை விட மேன்மையான மனிதர். விருதுகள் வரும், போகும்; அது இரண்டாவது பட்சம்தான். இந்திய கிரிக்கெட்டுக்கு சச்சின் வழங்கியுள்ள பங்களிப்பை பிரதிபலிப்பதாக அது இருக்காது என்றார்.
டென்னிஸ் குறித்துப் பேசிய பூபதி, 36 வயதானாலும், இப்போதும் வெற்றிபெற வேண்டும் என்ற தாகம் உள்ளது. இப்போதும் போட்டிகளை ரசித்து விளையாடுகிறோம். மே மாதம் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் பயஸýடன் இணைந்து பங்கேற்கவுள்ளேன். அதற்காக இப்போது சிறப்பாகத் தயாராகி வருகிறோம் என்றார்.
அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் குறித்து கேட்டபோது, முதலில் எங்களை நாங்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்பிறகே அதைப் பற்றி சிந்திக்க முடியும் என்றார்.
சோம்தேவ், சானியா ஆகியோரைப் பாராட்டிய பூபதி, சோம்தேவ் இளம் வீரர். அவர் இப்போதே 71-வது இடத்துக்கு வந்துவிட்டார். திறமையான வீரர். அவர் அவருடைய வழியில் தொடர்ந்து சிறப்பாக ஆட வேண்டும். சானியா ஒற்றையர் பிரிவில் சிறப்பாக ஆடி வருகிறார். அவர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஆடினால் தரவரிசையில் முன்னேற முடியும் என்றார்.

கருத்துகள் இல்லை:

Photobucket