அஸ்ஸலாமு அழைக்கும்[வரஹ்] எல்லாம் புகழும் இறைவனுக்கே!!!.. டுடே எக்ஸ்பிரஸ் நியூஸ் இணையதளம் வருகைக்கு நன்றி !!!....

செவ்வாய், ஏப்ரல் 05, 2011

ராமநாதபுரம் பாதாள சாக்கடை திட்டத்தில் ஊழல் : ம.ம.க., வேட்பாளர் ஜவாஹிருல்லா புகார்



ராமநாதபுரம் நகராட்சி பாதாள சாக்கடை திட்டத்தில் ஊழல்கள் நடந்துள்ளதாக,'' ம.ம.க.,வேட்பாளர் ஜவாஹிருல்லா குற்றம்சாட்டி உள்ளார். ராமநாதபுரம் வண்டிக்கார தெரு, அரண்மனை, சிவன்கோயில் தெரு, வனசங்கரி அம்மன் கோயில் தெரு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுப்பட்ட அவர் பேசியதாவது: ராமநாதபுரத்தில் அ.தி.மு.க., காலத்தில் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்திற்காக, தி.மு.க., அரசு ஒரு வீட்டிற்கு 7000 ரூபாய் வீதம் வசூல் செய்து இதுவரை ஐந்தாண்டுகளாகியும் திட்டம் முழுமையாக நிறைவேறவில்லை. இதனால் மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். திட்டத்தை செயல்படுத்தியதில் பல ஊழல்கள் நடைபெற்றுள்ளன. நான் ராமநாதபுரம் எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டால் திட்டத்தை துரிதபடுத்தி நிறைவேற்றுவேன்.குடிநீர் குழாய்கள் முறையாக அமைப்படாத காரணத்தால் தெருக்களில் தண்ணீர் வீணாக ஓடும் அவலநிலை உள்ளது. இதனால் ரோடுகள் குண்டும் குழியுமாக ,சேரும் சகதியுமாய் காட்சியளிக்கிறது. அத்துடன் கழிவு நீர் குடிநீரில் கலப்பதால் பலவித நோய்கள் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கொசுக்களின் தொல்லைகள் அதிகமாகி உள்ளது. ராமநாதபுரம் தலைமை மருத்துவமனை மிகவும் சீர்கேடாக உள்ளது. நான் வெற்றிபெற்றால் மருத்துவ சேவைகளில் முழுகவனம் செலுத்துவேன் என  உறுதியளிக்கிறேன். வர்த்தகம் நிறைந்த நகர்பகுதியில் மின்சாரத்தை முறையாக வழங்காமல் அறிவிக்கப்படாத மின்தடை தொடர்வதால், வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொது மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற அ.தி.மு.க., ஆட்சிக்கு வரவேண்டும். இங்கு இதுவரை எம்.எல்.ஏ.,வாக இருந்த ஹசன்அலி எதுவும் செய்யாமல், இனி செய்வதாக வாக்குறுதி கொடுத்து வருவதை மக்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள். இலங்கை அதிபர் நெருங்கிய நண்பர் என கூறிவிட்டு தற்போது மீனவர்களின் உயிருக்கு உத்தரவாதம் தருவோது போல் பாசங்கு செய்கிறார். மக்கள் நன்கு அறிந்து செயல்பட வேண்டும், என்றார். முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, அ.தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் முனியசாமி, மாவட்ட முன்னாள் செயலாளர் முருகேசன், மாவட்ட அவைத்தலைவர் சேகர், மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதா, ஒன்றிய செயலாளர் அசோக்குமார், நகர் செயலாளர் அங்குசாமி, ஜெ.,பேரவை சீனிவாசன், தே.மு.தி.க., நகர் செயலாளர் முத்தீஸ்வரன், கம்யூ., மாவட்ட செயலாளர் ராஜன், ரகுநாதன், மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் கோவிந்தசாமி, ராஜ்குமார், ம.ம.க., பொறுப்பாளர்கள் அப்துல்ரகுமான், அப்துல்ரசீம், பரக்கத்துல்லா, சுல்தான் உட்பட பலர் உடன் சென்றனர்.

கருத்துகள் இல்லை:

Photobucket