அஸ்ஸலாமு அழைக்கும்[வரஹ்] எல்லாம் புகழும் இறைவனுக்கே!!!.. டுடே எக்ஸ்பிரஸ் நியூஸ் இணையதளம் வருகைக்கு நன்றி !!!....

புதன், ஏப்ரல் 20, 2011

மீனவர்கள் படுகொலை: இலங்கை அரசுக்கு இந்தியா கண்டனம்

மீனவர்கள் படுகொலை:
 
 இலங்கை அரசுக்கு
 
 இந்தியா கண்டனம்


ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் கடலில் மீன் பிடிக்க சென்ற போது துப்பாக்கியால் சுடப்பட்டும், வெட்டியும் கொலை செய்யப்பட்டனர். உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா இலங்கையை தோற்கடித்ததால் சிங்கள கடற்படை அவர்களை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
இலங்கை அரசின் இந்த செயலுக்கு மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமாராவ் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
சில மாதங்களுக்கு முன்பு நான் கொழும்பு சென்று தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது குறித்து அதிபர் ராஜ பக்சேயுடன் பேச்சு நடத்தினேன். அப்போது தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று கூறினேன். மீன்பிடி உரிமை குறித்து இந்தியா-இலங்கை இடையே கூட்டுக்குழு அமைக்கவும் வற்புறுத்தினேன்.
 
மீனவர்கள் பிரச்சினைக்கு வன்முறையில் தீர்வுகாண முடியாது. பேச்சு வார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

Photobucket